மண்டாடி 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா, சூரி பெஸ்ட்
சூரி சம்பவம்
சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் மண்டாடி.
இப்படம் எல்லோர் எதிர்ப்பார்ப்பை போலவே மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்தது.
இதைபோலவே பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க, இந்த வருடம் சூரிக்கு மிகச்சிறந்த வருடமாகவே அமைந்துள்ளது.
படம் வெளியாகி 7 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 69 கோடிகள் வசூல் செய்து பெரிய லாபத்தை தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என அனைவருக்குமே கொடுத்துள்ளது.
மேலும் இது சூரியின் முதல் ரூ 100 கோடி படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த வாரமும் தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் கண்டிப்பாக இந்த வாரமே அந்த ரூ 100 கோடி க்ளப் வந்தாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது.
