நடிக்க வருவதற்கு முன்பு நடிகை சிம்ரன் இப்படியொரு வேலை செய்துள்ளாரா?… அவரே ஷேர் செய்த விஷயம்

நடிகை சிம்ரன்
மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஒருவர் தான் சிம்ரன்.
ஒன்ஸ்மோர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நேருக்கு நேர், விஐபி என தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்தவர் முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்தார்.
தமிழ் சினிமாவின் டாப் நாயகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடனும் தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்ற ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.
பீக்கில் இருந்த போதே நடிகை சிம்ரன் தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2003ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடக்க 2 மகன்களும் உள்ளனர். எல்லா நடிகைகளை போல திருமணத்திற்கு பிறகு சில காலம் கேப் எடுத்தவர் வாரணம் ஆயிரம் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
பின் அடுத்தடுத்து படங்கள் நடித்து வருபவர் கடைசியாக நடிகர் ரஜினியின் தர்மன் படத்தில் கமிட்டாகியுள்ளார்.
முதல் வேலை
படங்கள் நடிப்பதை தாண்டி நடிகை சிம்ரன் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வருகிறார். நடிகை சிம்ரன் ஒரு பேட்டியில் நடிக்க வருவதற்கு முன்பு செய்த வேலை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், என்னுடைய கரியர் தொகுப்பாளினியாக தான் ஆரம்பம் ஆனது, அது டிடி சேனலில் 1995ல் தொடங்கியது. நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் பெயர் சூப்பர் ஹிட் முக்காபுல்லா பாடல்கள்.
பாடல் நம்பர் ஒன்று, இரண்டு என்று நான் தொகுத்து வழங்குவேன், அதனால்தான் நான் வணக்கம் சொல்லும்போது அந்த தொகுப்பாளினி ஸ்டைல் இருக்கும் என்றார்.
