பர்பாமென்ஸை போட்ட அப்பத்தா.. மனம் மாறிய குடும்பம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. நேற்றைய எபிசோடில் மீனாட்சி தென் மொழியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, இங்கே அப்பத்தா வீட்டில் சக்தியும் லோகுவும் தேன்மொழி வயிற்றில் வளருவது நம்ம விட்டு வாரிசு.. இப்படி வீட்டை விட்டு போயிட்டாளே என வருத்தப்படுகிறார்கள்.
மறுபக்கம் மீனாட்சி தேன்மொழி சாப்பிடாமல் இருக்க சுமதி சின்ன வயசுல இங்க ரெண்டு பேரு சாப்பிடாம இருந்தால் உங்களை இப்படித்தான் சாப்பிட வைப்பேன் என்று சாப்பாட்டை ஊட்டி விட மூவரும் எமோஷனலாகின்றனர்.
மறுபுறம் மனோ, சக்தி மற்றும் லோகு ஆகியோர் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க அப்பத்தா அங்கு வந்து என்ன சாப்பாடு அப்படியே இருக்கு என்று கேட்க தேவி யாரும் சாப்பிட வரல என்று சொல்கிறாள்.
அதைத் தொடர்ந்து அப்பத்தா டேய் மனோ சாப்பிட வாடா.. சக்தி, லோகு சாப்பிட வந்த என்று அழைக்க எல்லோரும் அப்பத்தா கூப்பிட்டதால் மறுக்காமல் சாப்பிட வருகின்றனர்.
இதையடுத்து அப்பத்தா நான் என்ன தேன்மொழியை குழந்தை பெத்துக்க கூடாதுன்னா சொன்ன? இவ யாரு இந்த வீட்டு பொண்ணு.. இதை குழந்தை இல்லாம போனதுக்கு யார் காரணம்? அதை யார் சரி பண்ணனும்?
ஒரு ஆம்பளை இல்லாமல் சின்ன குழந்தையா இருந்த லோகு கைய புடிச்சுகிட்டு தன்னந்தனியே வந்து உழைச்சி முன்னேறி இருக்கேன். ஆம்பள துணை இல்லாமல் குடும்பத்தை நடத்துவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆனா இன்னைக்கு இந்த அப்பத்தா சொல்றது தப்பா தெரியுது அளவுக்கு வளர்ந்துட்டீங்க என்று கண்கலங்கி அழுது டிராமா போட தேவி நான் குழந்தை பெத்துகிட்டு பிறகு தேன்மொழி குழந்தை பெத்துக்கட்டா என்ன?
எனக்கு இந்த வீட்ல இடம் இருக்கு ஆனா கருவை கலைச்சிட்டு வரட்டும்.. அப்படி இல்லனா அப்படியே போகட்டும் என்று சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
