சூர்யா 49வது படம் குறித்து வந்த சூப்பர் தகவல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா, இந்த வருடத்தில் மட்டும் அவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது. முதலில் சூர்யாவின் கருப்பு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாரான கருப்பு திரைப்படம் வெளியானது.
பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இப்படம் ரூ. 300 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. அப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். தெலுங்கு சினிமா இயக்குனர் இயக்கியுள்ள இப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
விமர்சனம் மற்றும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகம் முழுவதும் ரூ. 250 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
அடுத்த படம்
தற்போது சூர்யா தனது 48வது படத்தில் வேலைகளில் பிஸியாக உள்ளார்.
ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கும் இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்க சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 49வது படத்திற்கு இயக்குனர் ஹெச் வினோத் கதையை தேர்வு செய்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
