வீட்டை விட்டு வெளியே போ.. அயலிக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திராணி – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அயலி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்திராணி செழியன் வீட்டை விட்டு துரத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, இங்கே வர்மா அர்ச்சனாவை தேடி வர அழகு காப்பாற்றி விட்டு பர்தா அணிந்து கொண்டு ரூமில் இருந்து வெளியே வருகிறாள். பர்மாவின் அடியாளுக்கு பர்தா அணிந்திருப்பதை பார்க்கில் சந்தேகம் வந்து பின்தொடர்கிறான். மேலும் வர்மாவுக்கும் தகவல் கொடுக்க வர்மா அந்த பெண்ணை கடத்தி அழைத்து வந்து முகத்தை திறந்து பார்க்க அது அயலி இல்லை என தெரிய வருகிறது.
இதையடுத்து வருமா அடியாளை போட்டு அடித்து இதை கூட தெரிய நோட் பண்ண மாட்டியா என கோபப்படுகிறார். பிறகு அயலி வீட்டுக்கு வர பாவை சாப்பிடாமல் இருக்க என்ன ஆச்சு என்று விசாரிக்கும் போது நடந்த விஷயங்கள் தெரிய வருகிறது.
அடுத்து அயலி செழியன் அண்ணா அப்படி பண்ணி இருக்க மாட்டார் என சப்போர்ட் செய்து பேச இந்திராணி அவர் தப்பு பண்ணி இருக்காரு..
அவருக்கு சப்போர்ட் பண்றதா இருந்தா அவரோட அப்படியே போயிட்டு இந்த வீட்டை விட்டு போய் அவரோடவே இருந்துக்க சொல்ல அயலி அதிர்ச்சி அடைகிறாள்.
பிறகு அயலி சிவாவிடம் நாம இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்? அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும் என சண்டையிட சிவா அடுத்து என்ன செய்யலாம் என்று கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
