முத்து பிஸ்னஸில் பெரிய அடி.. சிறகடிக்க ஆசை நாளைய ப்ரொமோ

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மீனா கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது தாயின் அன்புக்காக ஏங்குவது போல கதை நகர்கிறது. மறுபுறம் ரோகிணியை விஜயா முற்றிலுமாக புறக்கணித்து ஒதுக்கி வைத்திருக்கிறார்.

ஜோசியர் சொன்னது போல தன்னுடைய பிரச்சனைக்காக மாமியார் விஜயாவை எப்படியாவது பரிகாரம் செய்ய வைக்க வேண்டும் என திட்டம் போட்டு வரும் ரோகிணி, அதற்காக மீனா மற்றும் ஸ்ருதி ஆகியோரை கூட்டணிக்கு சேர்த்துக் கொள்கிறார். அவர்களும் மாமியார் விஜயா பரிகாரம் செய்ய வைக்க ஒரு திட்டம் போடுகிறார்கள்.

முத்து பிஸ்னஸில் பெரிய அடி.. சிறகடிக்க ஆசை நாளைய ப்ரொமோ | Siragadikka Aasai Next Muthu Business Trouble

இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோடில் மீனாவுக்கு அவரது தங்கை சீதா மூலமாக ஒரு பெரிய திருமண ஆர்டர் வருகிறது. பூ டெக்கரேஷன் செய்ய வேண்டும் என சொல்லி அதற்கான அட்வான்ஸ் தொகையை மீனாவிடம் கொடுத்து விட்டு செல்கிறார் ஒரு பெண்.

அந்த பணத்தை முத்துவிடம் கொடுத்து விடலாம் என மீனா அவரது ஆபீசுக்கு செல்கிறார். ஆனால் முத்து அந்த பணத்தை வாங்க மறுத்து, அதை நீயே வைத்துக்கொள் உன்னுடைய தொழிலுக்கு தேவைப்படும் என சொல்லி விடுகிறார். அப்போது முத்து ஆபிசுக்கு ஒரு போன் கால் வருகிறது.

முத்து பிஸ்னஸில் பெரிய அடி.. சிறகடிக்க ஆசை நாளைய ப்ரொமோ | Siragadikka Aasai Next Muthu Business Trouble

அவரது ட்ராவல்ஸின் கார் விபத்தில் சிக்கியதாக சொல்ல அதிர்ச்சியுடன் அங்கே போகிறார்கள்.

அங்கு சென்றால் முத்துவின் தொழிலை அழிக்க நினைக்கும் வில்லனின் கார் தான் விபத்துக்கு காரணம் என தெரிய வருகிறது. அங்கு முத்துவின் முன்பே அவரது டிரைவரை பேசி தன் பக்கம் இழுக்கிறார் வில்லன்.  

முத்து பிஸ்னஸில் பெரிய அடி.. சிறகடிக்க ஆசை நாளைய ப்ரொமோ | Siragadikka Aasai Next Muthu Business Trouble

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *