2 நாள் முடிவில் மாஸ் வசூல் வேட்டை செய்த நானியின் தி பாரடைஸ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தி பாரடைஸ்

தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஹிப்ஹாப் ஆதி டித்த மீசைய முறுக்கு 2 என்ற படம் வெளியாகி இருந்தது.

அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகர் நானி நடித்த தி பாரடைஸ் என்ற படம் வெளியாகி இருந்தது, தெலுங்கில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நானியுடன் இந்த படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். தாய் – மகன் பாசத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

2 நாள் முடிவில் மாஸ் வசூல் வேட்டை செய்த நானியின் தி பாரடைஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Nani The Paradise Movie 2 Days Bo

பாக்ஸ் ஆபிஸ்


படம் வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதுகுறித்து நடிகர் நானியே தனது இன்ஸ்டாவில் ஒரு பாசிட்டீவ் பதிவு போட்டிருந்தார்.

கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் நானியின் தி பாரடைஸ் திரைப்படம் 2 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 114 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *