விஜய்யின் ஜனநாயகன் படத்தால் நேர்ந்த ஏமாற்றம்… கதறி அழும் பிரபல நடிகை, வீடியோ இதோ

விஜய்யின் ஜனநாயகன் படத்தால் நேர்ந்த ஏமாற்றம்… கதறி அழும் பிரபல நடிகை, வீடியோ இதோ


ஜனநாயகன்

நடிகர் விஜய் படங்கள் பாதி பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகி இருக்கிறது. 

ஆனால் அவரது கடைசிப்படமான ஜனநாயகன் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அந்த படமும் பிரச்சனையை எதிர்க்கொண்டு தான் வெளியாகியுள்ளது.

தணிக்கை சான்றிதழ் கிடைத்திருந்தால் பொங்கல் கொண்டாட்டமாக இருந்திருக்கும், இப்போது மட்டும் என்ன ஜனநாயகன் ரிலீஸ் நாளை திருவிழாவாக ரசிகர்கள் ஆக்கிவிட்டனர்.

சென்னையில் மட்டுமே முதல் நாளில் படம் ரூ. 6 கோடி வரை வசூல் வேட்டை செய்ய உலகம் முழுவதும் ரூ. 90 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் படத்தால் நேர்ந்த ஏமாற்றம்... கதறி அழும் பிரபல நடிகை, வீடியோ இதோ | Anandhi Cries Because Of Vijay Jananayagan Movie

வீடியோ

எல்லோரும் ஜனநாயகன் சூப்பர், தளபதி மாஸ் என படம் குறித்து பதிவுகள் போட்டுவரும் நிலையில் பிரபல நடிகை ஆனந்தி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் ஜனநாயகன் படத்தால் நேர்ந்த ஏமாற்றம்... கதறி அழும் பிரபல நடிகை, வீடியோ இதோ | Anandhi Cries Because Of Vijay Jananayagan Movie

அதாவது திருமணம், குழந்தைக்கு பிறகு முதன்முதலாக கமிட்டாகி நடித்த படம் விஜய்யின் ஜனநாயகன் தான். அதுவும் விஜய்யுடன் இருக்கும் ஒரு காட்சி, இதனால் படத்தை காண ஆவலாக திரையரங்கிற்கு சென்றேன், ஆனால் எனது காட்சிகள் வரவில்லை.

அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இதில் நடந்தது, ஆனால் காட்சிகள் வரவில்லை, மிகவும் வருத்தமாக உள்ளது என அழுதபடி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *