இரண்டாம் நாளிலும் தொடரும் சாதனை.. ஜனநாயகன் சென்னை வசூல் அப்டேட்

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். கடைசி முறையாக விஜய்யின் படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் எல்லோரும் எமோஷ்னலாக வருகின்றனர்.
அதனால் படம் நல்ல வசூலை முதல் நாளில் இருந்தே குவித்து வருகிறது.
2ம் நாள் வசூல்
இரண்டாம் நாளிலும் நல்ல வசூலை ஜனநாயகன் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நல்ல வசூல் வந்திருக்கிறது.
இரண்டு நாட்களில் மொத்தம் 11 கோடி ரூபாயை ஜனநாயகன் ஈட்டி இருக்கிறது. அடுத்து விடுமுறை நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






