பாக்ஸ் ஆபிஸ்: GDN திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: GDN திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

மாதவன் நடிப்பில் வெளியான GDN திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

GDN

இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி. நாய்டுவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் GDN. மாதவன் கதாநாயகனாக நடித்த இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: GDN திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Gdn Movie 2 Days Worldwide Box Office

மேலும், துஷாரா விஜயன், சத்யராஜ், ப்ரியாமணி, ஜெயராம், வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 96, மெய்யழகன் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: GDN திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Gdn Movie 2 Days Worldwide Box Office

வசூல் விவரம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான GDN திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: GDN திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Gdn Movie 2 Days Worldwide Box Office

அதன்படி, 2 நாட்களில் GDN திரைப்படம் உலகளவில் ரூ. 3+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *