கீர்த்தி சுரேஷின் 'டோரதி' திரைப்படத்தின் முதல் விமர்சனம்..

கீர்த்தி சுரேஷின் 'டோரதி' திரைப்படத்தின் முதல் விமர்சனம்..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டோரதி திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம், வாங்க.

கார்த்திக் சுப்புராஜ்

பிட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, இறைவி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மஹான் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக ரெட்ரோ திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

டோரதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் டோரதி. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் விமர்சனம்

இந்நிலையில், டோரதி திரைப்படத்தை பார்த்த இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தனது முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதில், “இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களிலேயே மிகவும் துணிச்சலான மற்றும் சிறந்த படைப்பு இது. கதை எதை நோக்கி செல்கிறது என்பதை சற்றும் கணிக்க முடியாத அளவுக்கு, இது மிகுந்த ஆச்சரியத்தையும் அதே சமயம் அதிர்ச்சியையும் அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

அனுராஜ் காஷ்யப்பின் இந்த விமர்சனம் டோரதி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *