உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம்

உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம்

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 16 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன்

சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இது தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம்.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் | Jananayagan Worldwide 16 Days Box Office

இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் | Jananayagan Worldwide 16 Days Box Office

ரிலீஸ்

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவரவிருந்த இப்படம், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் திரைக்கு வந்தது.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் | Jananayagan Worldwide 16 Days Box Office

விஜய்யின் திரைப்படம் என்றாலே திரையரங்குகளில் மாபெரும் கொண்டாட்டம் இருக்கும்; அதுவே இது அவருடைய கடைசி படம் என்பதால் ஒவ்வொரு திரையரங்கமும் திருவிழா கோலமாக மாறியது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

வசூல்

முதல் நாளிலிருந்தே ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பற்றி பார்த்து வருகிறோம். இந்நிலையில், 16 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் 16 நாட்களில் ரூ. 305 கோடி வசூல் செய்துள்ளது.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் | Jananayagan Worldwide 16 Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *