சீதையாக நடித்ததால் எழுந்த கடும் விமர்சனங்கள்.. பதிலடி கொடுத்த நடிகை சாய் பல்லவி


Sai pallavi about critics on her sita character: சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்ததற்காக பல கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு சமீபத்திய பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியது என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ராமாயணா 

ராமாயணா திரைப்படம் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியானது. உலகளவில் இதுவரை ரூ. 1838 கோடி வசூல் செய்து பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படத்தில் சீதா கதாபாத்திரத்தை நடிகை சாய் பல்லவி ஏற்று நடித்திருந்தார். ஒரு பக்கம் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், இவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் அல்ல என கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

சீதையாக நடித்ததால் எழுந்த கடும் விமர்சனங்கள்.. பதிலடி கொடுத்த நடிகை சாய் பல்லவி | Sai Pallavi About Criticism On Her Sita Character



சமீபத்தில் நடைபெற்ற We The Women நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி பங்கேற்றபோது, ராமாயணா திரைப்படத்தில் சீதையாக நடித்த பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். “ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் ஒரு பகுதியை நம் மனதில் சுமந்து செல்கிறோம். அதுபோல், சீதை கதாபாத்திரமும் என்னுள் சில தனிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அவை எனக்கு மட்டுமே உரியவை” என கூறினார்.



விமர்சனங்களுக்கு பதிலடி


சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்தது குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. அதிலும், சாய் பல்லவியை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது தவறு என்றெல்லாம் கூட விமர்சனம் கூறப்பட்டது. இந்த நிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுத்திருக்கிறார் சாய் பல்லவி.

சீதையாக நடித்ததால் எழுந்த கடும் விமர்சனங்கள்.. பதிலடி கொடுத்த நடிகை சாய் பல்லவி | Sai Pallavi About Criticism On Her Sita Character

அவர் கூறியதாவது, “சீதா மாதா எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பது போன்ற சமூக வலைதள கருத்துக்களை நான் பார்க்காமல் இல்லை. ஆனால், இதுபோன்ற விமர்சனங்கள் நம்முடைய மன உறுதியை குலைக்குமானால், நாம் நம்மை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை, ஒரு மனிதராக என்னால் முடிந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறேன். கருத்துக்கள் என்பது கருத்துக்கள்தான்; நமக்குள் தன்னம்பிக்கையும் மன உறுதியும் இருந்தால், உலகத்தின் விமர்சனங்களை எதிர்கொள்ளலாம்” என கூறினார்.

சீதையாக நடித்ததால் எழுந்த கடும் விமர்சனங்கள்.. பதிலடி கொடுத்த நடிகை சாய் பல்லவி | Sai Pallavi About Criticism On Her Sita Character

மேலும் பேசிய அவர், திரைப்படங்களில் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும், ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதன் தனித்துவமும், கதைக்கு அது அளிக்கும் பங்களிப்பும் மிகவும் முக்கியம் என்றார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *