23 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்


Ramayana movie 23 days box office: ராமாயணா திரைப்படம் வெற்றிகரமாக 23 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.



ராமாயணா திரைப்படம்


பாலிவுட் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர். அனிமல் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ராமாயணா. புராண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்க, சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாலிவுட் இசையமைப்பாளர் Hans Zimmer மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இணைந்து இசையமைத்துள்ளனர்.

Box Office: 23 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Ramayana Movie 23 Days Box Office

ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ராமாயணா திரைப்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். இதனால், இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சாதனையை ராமாயணா படைத்து வருகிறது. இந்நிலையில், உலகளவில் 23 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


23 நாட்கள் வசூல் விவரம்



ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வசூல் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில், 23 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ராமாயணா உலகளவில் இதுவரை ரூ. 1838 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 2000 கோடியை தொட்டு இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை படைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Box Office: 23 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Ramayana Movie 23 Days Box Office

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படம் 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *