Itllu Arjuna (தெலுங்கு) திரை விமர்சனம்

Itllu Arjuna movie review: அறிமுக நடிகர் சாய் அனிஷ், அனஸ்வரா ராஜன், கலையரசன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள Itllu Arjuna தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Itllu Arjuna (தெலுங்கு) திரை விமர்சனம் | Itllu Arjuna Movie Review

கதைக்களம்



அர்ஜுன் (சாய் அனிஷ்) தனது சிறுவயதில் அப்பா மைம் கோபியுடன் சேர்ந்து ஒரு திருட்டில் ஈடுபடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக மைம் கோபி போலீசால் சுடப்படுகிறார்.


போலீசிடம் சிக்கும் அர்ஜுன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்.

அவர் வளர்ந்து பெரியவனானதும் பைக் டாக்சி வேலை செய்கிறார்; என்றாலும் திருடன் என்ற முத்திரை அவர் வசிக்கும் பகுதியில் அவருக்கு இருக்கிறது.


எதிர்வீட்டு கீர்த்தியை (அனஸ்வரா ராஜன்) ஒருதலையாக காதலிக்கும் அர்ஜுன், எங்கேயாவது திருட்டு நடந்தால் சந்தேகத்தின் பேரில் போலீசாரால் பிடிக்கப்பட்டு பின் விடுவிக்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.

Itllu Arjuna (தெலுங்கு) திரை விமர்சனம் | Itllu Arjuna Movie Review

இந்த சூழலில் பெத்தண்ணா (முகேஷ் ரிஷி) என்ற டான் 1000 கோடி ரூபாய் ஹவாலா பணம் குறித்த வேலையை முடிக்க, தனது மகன் முனியை ஜெய்சால்மருக்கு அனுப்புகிறார்.


அங்கே முனியை ஒரு கும்பல் தாக்கி ஹவாலா பணத்தை அடைவதற்கான பென்டிரைவ் மற்றும் பாஸ்வேர்டை பறிக்க முயற்சிக்கிறது.

அப்போது கௌரி (கலையரசன்) குறுக்கிட்டு முனியை காப்பாற்ற முயற்சிக்க, ஹெல்மெட் அணிந்த ஒருவனும் பென்டிரைவ் இருக்கும் பையை பறிக்க முயற்சிக்கிறான்.


அந்த சண்டையில் ஹெல்மெட் நபரை சுட்டுவிட்டு முனியும், கௌரியும் தப்பிக்கின்றனர். ஆனால், பை கைக்கு வந்ததும் முனியை சுட்டுக் கொள்கிறார் கௌரி.

Itllu Arjuna (தெலுங்கு) திரை விமர்சனம் | Itllu Arjuna Movie Review

1000 கோடிக்காக அவர் இதனை செய்ததாக தனது சகாக்களிடம் பையை திறந்தால் அதில் பென்டிரைவ், பாஸ்வேர்ட் இல்லை.


இதனால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் கௌரி, முனியை ஹெல்மெட் நபர் கொலை செய்துவிட்டதாக பெத்தண்ணாவிடம் கூறுகிறார். இதற்கிடையில் அர்ஜுனிடம் அந்த பென்டிரைவ், பாஸ்பேர்ட் இருக்கும் பார்சல் வந்து சேர்கிறது.




பெத்தண்ணாவின் ஆளாக இருந்து ஹெல்மெட் நபரை அனுப்பி வைத்த இன்ஸ்பெக்டர் இரானியும் (இளங்கோ குமரவேல்) அந்த பார்சலை தேடுகிறார். இவர்களிடம் இருந்து அர்ஜுன் எப்படி தப்பித்தார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்



ஒக்க சின்ன பேமிலி ஸ்டோரி என்ற வெப் தொடரை இயக்கிய மகேஷ் உப்பலா இப்படத்தையும் இயக்கியுள்ளார்.


பரபரக்கும் ஆக்ஷ்ன் திரில்லர் கதையில் காதல் டிராக்கையும் கச்சிதமாக கையாண்டுள்ளார் மகேஷ்.

அறிமுக ஹீரோ என்றாலும் ஏற்றுக்கொள்ளும்படியாக சாய் அனிஷிற்கு கேரக்டரை எழுதி, அதனை ரசிக்கும் படியாக காட்சிப்படுத்தியுள்ளார்.


ஆக்ஷனாக ஆரம்பிக்கும் கதை லவ் டிராக்கிற்கு சென்றாலும், அதிலும் சில திரில்லர் மொமெண்ட்ஸ் மற்றும் காமெடியை வைத்து முதல் பாதியை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார் இயக்குநர்.




இரண்டாம்பாதியில் பல இடங்களில் திக் திக் மொமெண்ட்ஸ் இருந்தாலும், ஆங்காங்கே வரும் காமெடியும் ரசிக்க வைக்கின்றன. கிளைமேக்ஸ் காட்சி அதகளம்.


சாய் அனிஷிற்கு அறிமுக படமாக இருந்தாலும் அந்த சுவடே தெரியா வண்ணம் நடிப்பு, நடனம், ஸ்டண்ட் என பிரமாதப்படுத்தியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் குறை கூற முடியாத அளவிற்கு நடித்துள்ளார்.

Itllu Arjuna (தெலுங்கு) திரை விமர்சனம் | Itllu Arjuna Movie Review

அனஸ்வரா ராஜன் துடுக்குத்தனமான பெண்ணாக சில இடங்களில் கடுப்பேற்றினாலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். தமிழ் நடிகர்களான இளங்கோ குமரவேல், கலையரசன் ஆகியோர் நெகட்டிவ் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.


ஓரிரு காட்சிகளுக்கே வந்தாலும் மைம் கோபி எதார்த்த நடிப்பில் அசத்திவிடுகிறார்.

வென்னிலா கிஷோர் தனது பாணியிலேயே ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்க, ரகுபாபுவும் தனது பங்கிற்கு காமெடி செய்துள்ளார்.


வாய் பேசமுடியாத ஹீரோ தனது திட்டத்தை ஹீரோயினிடம் தெரியப்படுத்துவது, வில்லன்களிடம் இருந்து தப்பிக்கும் பாணி போன்ற ஐடியாக்கள் நல்ல ரைட்டிங்.



படத்தின் மேக்கிங்கை பொறுத்தவரை எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாகவும், தரமாகவும் உள்ளது. OG படத்திற்கு போட்ட அதே டியூனை வைத்து தமன் ஒரு பாடலையும், பின்னணி இசையையும் பயன்படுத்தி போங்கடித்துள்ளார்.

Itllu Arjuna (தெலுங்கு) திரை விமர்சனம் | Itllu Arjuna Movie Review



ராஜா மகாதேவனின் ஒளிப்பதிவும், தினேஷ் சுப்பராயனின் சண்டைக்காட்சிகளும் மிரட்டல். கோட்டிகாரியின் படத்தொகுப்பு கச்சிதம். ஒரு சில குறைகளை மறைக்கிறது மகேஷ் உப்பலாவின் திரைக்கதை.

க்ளாப்ஸ்



  • நடிகர்களின் பங்களிப்பு


  • திரைக்கதை


  • ஆக்ஷன் காட்சிகள்



பல்ப்ஸ்



  • பார்த்து பழகிய கதைக்களம்



மொத்தத்தில் இந்த Itllu Arjuna பக்கா கமர்ஷியல் என்டர்டைன்மென்ட். ஜாலியாக சென்று திரையரங்கில் ரசிக்கலாம்.

Itllu Arjuna (தெலுங்கு) திரை விமர்சனம் | Itllu Arjuna Movie Review

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *