சூப்பர் சிங்கர் ஜூனியர் 11 டைட்டில் ஜெயித்த டெனின் பெர்னோ! பரிசு எத்தனை லட்சம் பாருங்க
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். உலகம் முழுக்க தமிழர்களை அதிகம் பேரை கவர்ந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 11ம் சீசன் நடைபெற்று வந்த நிலையில் அதன் பைனல் இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
டைட்டில் வின்னர்
டெனின் பெர்னோ தான் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ளார் அபார்ட்மெண்ட் பரிசாக கிடைத்துள்ளது.
இரண்டாம் இடத்தை ஆர்யன் வென்றுள்ளார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் மூன்றாம் இடத்தை சர்வேஸ்வரன் வென்றுள்ளார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டு இருக்கிறது.
