மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா, ரெஜினா வாங்கிய சம்பளம்


Mookuthi amman 2 Nayanthara, Regina Cassandrra Salary: சுந்தரி சி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க நடிகைகள் நயன்தாரா மற்றும் ரெஜினா ஆகிய இருவரும் எவ்வளவு சம்பளம் பெற்றார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


மூக்குத்தி அம்மன் 2



இயக்குநர் சுந்தர் சி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் அரண்மனை பட சீரிஸ் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியுள்ளது. தொடர்ந்து பெய் திரைப்படங்களை இயக்கி வந்த சுந்தர் சி முதல் முறையாக அம்மன் திரைப்படத்தை இயக்கினார்; அதுதான் மூக்குத்தி அம்மன் 2.

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா, ரெஜினா வாங்கிய சம்பளம் | Mookuthi Amman 2 Nayanthara Regina Salary



வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் நயன்தாரா, ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் நயன்தாரா அம்மன் வேடத்திலும், நடிகை ரெஜினா அம்மனை எதிர்க்கும் தீய சக்தியாகவும் நடித்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் ரெஜினாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


நயன்தாரா – ரெஜினா சம்பளம்



இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகைகள் நயன்தாரா மற்றும் ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை நயன்தாரா ரூ. 10 – 12 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். மேலும், வில்லியாக நடித்த ரெஜினா ரூ. 1.5 – 2 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா, ரெஜினா வாங்கிய சம்பளம் | Mookuthi Amman 2 Nayanthara Regina Salary



பொறுப்பு துறப்பு: மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் ரெஜினா வாங்கிய சம்பளம் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *