கார்த்திகை தீபம்: சதீஷ் வேஷத்தில் இருக்கும் மகேஷ்… கார்த்திக்கிடம் மாட்டிக்கொள்வாரா?

கார்த்திகை தீபம்

ZEE தமிழ் தொலைக்காட்சியின் ‘கார்த்திகை தீபம்’ தொடரில், இந்த வாரம் சதீஷின் ஆள்மாறாட்டத்தைச் சுற்றி பல திருப்பங்கள் நடக்கின்றன.

உண்மையான சதீஷ் கடத்தப்பட, அவரைப் போல வேஷம் போட்டிருக்கும் மகேஷ் திருமண ஏற்பாடுகளில் ஈடுபடுகிறார். இதற்கிடையில், சதீஷின் நடவடிக்கைகளில் சந்தேகம் வரும் கார்த்திக், உண்மையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

முதலில், உண்மையான சதீஷின் காதலி கார்த்திக்கிற்கு போன் செய்து உதவி கேட்கிறார். சதீஷ் தங்களுடைய காதல் விஷயத்தை வீட்டில் சொல்லத் தயங்குவதாகவும், இந்த விஷயத்தில் கார்த்திக் தான் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் சொல்கிறார்.

கார்த்திக்கும் அவருக்கு ஆறுதல் சொல்லி, எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாகக் கூறுகிறார். ஆனால், இதற்கிடையில் சிவானந்தியின் ஆட்கள் உண்மையான சதீஷைக் கடத்திச் சென்றுவிடுகின்றனர்.

மறுபக்கம், மகேஷ் புதிய கெட்டப்பில் சதீஷ் போலவே வேஷம் போட்டு, மாயாவுடன் பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்குச் செல்கிறார். அங்கே சுவாதியைப் பெண் பார்க்கும் சடங்குகள் எல்லாம் முறைப்படி நடக்கின்றன.

வந்திருப்பது உண்மையான சதீஷ் இல்லை என்பது தெரியாமல், இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளைப் பற்றிப் பேசத் தொடங்குகின்றனர்.

இதற்கிடையில், கேரளாவில் இருக்கும் கார்த்திக்கிற்கு இந்த விஷயங்கள் தெரிய வருகின்றன. சதீஷின் அக்கா லண்டனிலிருந்து இப்போதுதான் வர வேண்டும். ஆனால், அவர் ஏற்கெனவே வந்துவிட்டதாகச் சதீஷ் சொல்வதை நினைத்துப் பார்க்கும் கார்த்திக்கிற்குப் பெரிய சந்தேகம் வருகிறது.

வந்திருப்பது உண்மையான சதீஷ் இல்லை என்று நினைக்கும் அவர், இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார்.

இந்த நேரத்தில், சுவாதி போலி சதீஷான மகேஷை ஒரு கஃபேயில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது திடீரென்று கார்த்திக் அங்கே வருவதைப் பார்த்த மகேஷ் பயந்துபோகிறார்.

உடனே தனக்கு அவசர வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். பிறகு அங்கே வரும் கார்த்திக், சதீஷைப் பற்றி சுவாதியிடம் விசாரிக்கிறார்.

அவரும் சற்று முன்புவரை சதீஷ் அங்குதான் இருந்ததாகச் சொல்கிறார்.

இதனால் இன்னும் சந்தேகமடையும் கார்த்திக், மயில்வாகனத்தை அழைத்துக்கொண்டு நேராக வீட்டிற்குச் செல்கிறார்.

இருவரும் வீட்டின் காலிங் பெல்லை அடிக்கின்றனர். உள்ளே இருக்கும் மாயா, வாசலில் கார்த்திக் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

இப்போது கார்த்திக் வீட்டிற்குள் வந்தால் மகேஷின் உண்மையான முகம் தெரிந்துவிடுமா? உண்மையான சதீஷ் எங்கே இருக்கிறார்? கார்த்திக்கின் கேள்விகளுக்கு மாயா என்ன பதில் சொல்லப் போகிறார்? இந்தப் பரபரப்பான திருப்பங்களுடன் ‘கார்த்திகை தீபம்’ தொடரின் சனிக்கிழமை எபிசோடு விறுவிறுப்பாக நகர்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *