கார்த்திகை தீபம்: போலீசில் சிக்கிய ஸ்ரேயா, பீட்டர் – ரேவதி தலையில் புனித நீர் குடம்!
கார்த்திகை தீபம்
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில், நாளைய எபிசோடில் அதிரடி திருப்பங்களும், நெகிழ்ச்சியான தருணங்களும் இடம்பெறவுள்ளன.
போலீசில் சிக்கிய ஸ்ரேயா, பீட்டர்
சாமுண்டீஸ்வரி வீட்டில் நடக்கும் பிரச்சனையில், பீட்டர் செய்த கொலை முயற்சியை கார்த்திக் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், அங்கிருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை உடைத்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். இதற்கிடையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரேயா, பீட்டர் இருவரையும் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.
இதனால் வீட்டில் அனைவரும் சோகத்தில் இருக்க, பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டாம் எனக் கூறி கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். மறுபக்கம், ஸ்ரேயா மற்றும் பீட்டர் கைது செய்யப்பட்ட தகவலை முத்துவேல் சிவனாண்டி, சந்திரகலாவிடம் தெரிவிக்கிறார். இருவரையும் எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என நினைக்கும் அவர்கள், ஜாமீனில் எடுக்க ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகின்றனர்.
கங்கை பூஜைக்கு ரேவதியை அழைக்கும் பரமேஸ்வரி பாட்டி
இதற்கிடையில், ஊர் மக்கள் கோவிலில் கங்கை பூஜை செய்வதற்காக புனித நீரை எடுத்து வர ஏற்பாடு செய்கின்றனர். அந்தப் புனித நீரை பரமேஸ்வரி பாட்டி வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது. இதில் ரேவதிதான் புனித நீர் குடத்தைத் தலையில் சுமந்து வர வேண்டும் என பரமேஸ்வரி பாட்டி ஆசைப்படுகிறார். அதேபோல், இந்த நிகழ்வில் ராஜராஜனும் கலந்து கொள்ள வேண்டும் என ஊர் மக்கள் விரும்புகின்றனர்.
இதுபற்றி கார்த்திக் போனில் ரேவதியிடம் தெரிவிக்க, ரேவதி ராஜராஜனிடம் கூறுகிறார். இதையடுத்து ராஜராஜன் சாமுண்டீஸ்வரியிடம் சென்று அனுமதி கேட்க, அவர் எந்தத் தடையும் இல்லாமல் சம்மதம் தெரிவிக்கிறார். “இதற்கு இனி நான் எந்தத் தடையும் போட மாட்டேன். நீங்கள் தாராளமாகச் செல்லலாம்” எனக் கூறும் சாமுண்டீஸ்வரி, தான் இன்னும் அந்த உண்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், செல்லும்போது பிள்ளைகளையும் அனைவரையும் அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார்.
மகிழ்ச்சியில் ராஜராஜன் – நெகிழ்ச்சியில் ரேவதி
சாமுண்டீஸ்வரி சம்மதம் தெரிவித்ததால் ராஜராஜன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். உடனே கார்த்திக்கிற்கு தகவல் தெரிவித்துவிட்டு, நிகழ்வில் கலந்து கொள்ளப் புறப்படுகிறார். அங்கு ரேவதி வர, பரமேஸ்வரி பாட்டி ஆசையுடன் அவரது தலையில் புனித நீர் குடத்தை வைத்து ஆசீர்வதிக்கிறார். இந்த நெகிழ்ச்சியான தருணத்துடன் நாளைய எபிசோட் நிறைவடைகிறது.
போலீசில் சிக்கிய ஸ்ரேயா, பீட்டர்… ஒருபக்கம் குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும் தருணங்கள்… மறுபக்கம் ரேவதிக்கு கிடைக்கும் பாட்டியின் ஆசீர்வாதம் என பரபரப்பாக நடக்கும் கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
