பணம் கொடுத்து என் தவறான வீடியோ பரப்புகிறார்கள்.. சீரியல் நடிகை பிரதிபா பதிலடி

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் கங்கா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரதீபா. அவர் தொடரிலிருந்து பாதியில் வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு அவர் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். 

நடிகை பிரதிபாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் ட்ரெண்டி மற்றும் ஹாட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிறது.

பணம் கொடுத்து என் தவறான வீடியோ பரப்புகிறார்கள்.. சீரியல் நடிகை பிரதிபா பதிலடி | Pratibha Reply To Deepfake Ai Videos

போலி வீடியோ பற்றி..

நடிகை பிரதீபாவின் போலியான ஏஐ வீடியோக்களை சிலர் எடிட் செய்து வெளியிட்டு வருவதாக அவரே தற்போது குற்றம் சாட்டியிருக்கிறார்.

“அதற்காக யாரோ ஒருவர் பணம் செலவழித்து வீடியோக்களை உருவாக்கி அதை வெளியிட்டு என்னுடைய புகழை கொடுக்கலாம் என நினைக்கிறார். ஆனால் அது என் புகழை கூட்டுகிறது.

இதுபோல உங்களுடைய போலியான வீடியோக்களை பார்க்க நேர்ந்தால் பயப்படாதீர்கள். ஏன் ஏஐ-யை உருவாக்கியவர்களே இது போன்ற விஷயங்களுக்காக வருத்தத்தில் இருக்கிறார்கள்.
 

நெகட்டிவிட்டியை ignore செய்து உங்களுக்கு அமைதி தரும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். சிலர் பணம் செலவழித்து உங்களை கீழே தள்ள நினைக்கலாம், ஆனால் அவர்கள் உங்களுக்கு பிரமோஷன் தான் செய்கிறார்கள். இலவச PR.

இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் அவர்கள் இந்த விஷயத்தின் மூலம் கவனத்தை ஈர்க்கப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களை புறக்கணிப்பது தான் சிறந்த ஒன்று என்பதை நான் புரிந்து கொண்டேன். நன்றி.”

இவ்வாறு நடிகை பிரதீபா கூறியிருக்கிறார்.  

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *