ஆதி பற்றிய உண்மை. ஜீவா செய்த காரியத்தின் பின்னணி அம்பலம்! கோபத்தில் ஜீவா – வாகை சூடவா
வாகை சூடவா
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘வாகை சூடவா’.
நேற்றைய எபிசோடில், ஜீவா அரியரை கிளியர் செய்யும் வரை தான் வேலைக்கு வரப்போவதில்லை என மீனாட்சி அதிரடியாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த நிலையில், இன்றைய எபிசோடில் ஆதி பற்றிய அதிர்ச்சிகரமான உண்மை மீனாட்சிக்கு தெரிய வருவதால் கதை முக்கியமான கட்டத்தை எட்டுகிறது.
அதாவது, மீனாட்சியின் முடிவால் கோபமடையும் ஜீவா, “நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க? என்னைப் பற்றி யோசிக்காமல் உன் வேலையைப் பாரு” என சொல்ல, மீனாட்சி அதற்கு மறுப்பு தெரிவித்து தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள்.
இதனைத் தொடர்ந்து சுமதியும் மீனாட்சியிடம் இந்த விஷயம் குறித்து பேச முயற்சி செய்கிறார். ஆனால், “இந்த விஷயத்தில் நீ தலையிடாத அம்மா” என மீனாட்சி திட்டவட்டமாகச் சொல்ல, சுமதி வேறு வழியின்றி அமைதியாகி விடுகிறார்.
அதன் பிறகு ஜீவாவும் மீனாட்சியும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருக்கும் ஜீவாவை இன்னும் கடுப்பேற்றும் வகையில், அவனது ஸ்டைலிலேயே மீனாட்சி பதிலடி கொடுக்கத் தொடங்குகிறாள். போனில் பாட்டு போடுவது, டீக்கடையில் வண்டியை நிறுத்தச் சொல்லி ஜாலியாக டீ குடிப்பது என ஜீவாவை வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறாள்.
இதனால் இருவருக்கும் இடையேயான காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்கின்றன.
இதையடுத்து கோவிலுக்குச் செல்லும் மீனாட்சி, அங்கு தனது தோழி ஒருவரை சந்திக்கிறாள். இந்த சந்திப்புதான் கதையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைகிறது. ஆதி உண்மையில் எப்படிப்பட்டவன், அவனிடமிருந்து மீனாட்சியைக் காப்பாற்றுவதற்காகத்தான் ஜீவா அவளது கழுத்தில் தாலி கட்டினான் என்ற உண்மை மீனாட்சிக்குத் தெரிய வருகிறது.
இதுவரை ஜீவாவைப் பற்றியும் அவனது செயல்கள் பற்றியும் வேறு விதமாக நினைத்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு இந்த உண்மை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஜீவா தாலி கட்டியதற்கான உண்மையான காரணத்தை அறிந்த பிறகு மீனாட்சியின் மனதில் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது? ஆதி பற்றிய உண்மையை நேரடியாக ஜீவாவிடம் கேட்பாளா? ஜீவா–மீனாட்சி உறவு அடுத்த கட்டத்திற்கு நகருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய ‘வாகை சூடவா’ சீரியலை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
