6 நாட்களில் அடித்து நொறுக்கிய மண்டாடி வசூல்
மண்டாடி
சூரி வென்னிலா கபடி குழு படம் மூலம் தமிழ் நெஞ்சங்கள் மனதை கொள்ளை கொண்டவர்.அதை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் காமெடியனாக நடித்து வந்தவர்.
ஆனால், வெற்றிமாறனின் விடுதலை படம் சூரியை ஒரு முழுநீள ஹீரோவாக மாற்றிவிட்டது. அதை தொடர்ந்து அவரும் மாமன், கருடன் என தொடர் ஹிட்டை கொடுத்து தற்போது மண்டாடி படத்திலும் மிகப்பெரிய ஹிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மண்டாடி படம் வெளிவந்த 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் சூரி கூடிய விரைவில் ரூ 100 கோடி க்ளப்பில் இணைந்து முன்னணி நடிகர்களுக்கு இணையாக வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
