வீரா சீரியல் புகழ் வைஷ்ணவி நடிக்கப்போகும் மூக்குத்தி அம்மன் சீரியலின் நாயகன் யார் தெரியுமா?


வீரா சீரியல்

ஜீ தமிழில் வெற்றிகரமாக வீரா என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் வைஷ்ணவி மற்றும் அருண் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள், இந்த ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த தொடர் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

விறுவிறுப்பின் உச்சமாக கதை சென்றுகொண்டிருக்கும் நிலையில் சீரியல் குழுவிடம் இருந்து ஒரு ஷாக்கிங் நியூஸ் வந்தது. அதாவது வீரா சீரியல் விரைவில் முடிவடையப்போவதாக தகவல் வந்துள்ளது.

புதிய சீரியல்

இந்த நிலையில் நடிகை வைஷ்ணவி அடுத்த தொடரில் நடிக்க கமிட்டாகிவிட்டார், ஏற்கெனவே அந்த தகவலும் வந்துவிட்டது.

அதாவது மூக்குத்தி அம்மன் என்ற புதிய சீரியலில் நாயகியாக நடிக்கிறார். அந்த தொடரில் நாயகனாக நடிக்க அண்மையில் சன் டிவியில் முடிவடைந்த ஆடுகளம் சீரியல் நாயகன் சல்மான் தான் நாயகனாக நடிக்க உள்ளாராம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *