தர்மனுடன் செல்ஃபி எடுத்த நடிகை ஸ்ரேயா.. படத்தில் நடிக்கிறாரா? வெளிவந்த புகைப்படம்

ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ஸ்ரேயா.

தர்மன்

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்மன். பல ஆண்டுகளுக்கு பின் கமல் ஹாசன் – ரஜினிகாந்த் கூட்டணியில் இப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தர்மனுடன் செல்ஃபி எடுத்த நடிகை ஸ்ரேயா.. படத்தில் நடிக்கிறாரா? வெளிவந்த புகைப்படம் | Shriya Selfie With Rajinikanth In Dharman Shooting

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகைகள் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா நடிக்கிறார்கள். மேலும் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

தர்மனுடன் செல்ஃபி எடுத்த நடிகை ஸ்ரேயா.. படத்தில் நடிக்கிறாரா? வெளிவந்த புகைப்படம் | Shriya Selfie With Rajinikanth In Dharman Shooting

ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம்

நடிகை ஸ்ரேயா இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் ரஜினிகாந்துடன் இணைந்து சிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், தர்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தர்மனுடன் செல்ஃபி எடுத்த நடிகை ஸ்ரேயா.. படத்தில் நடிக்கிறாரா? வெளிவந்த புகைப்படம் | Shriya Selfie With Rajinikanth In Dharman Shooting

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், ஸ்ரேயவும் இப்படத்தில் நடிக்கிறாரா அல்லது இது வெறும் சந்திப்பு தானா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *