கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ! தீபிகாவிடம் இருந்து தப்பிய கயல் செய்த அதிரடி விஷயம்
சன் டிவியில் கயல் சீரியலில் எழிலை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என கயல் தீவிரமாக போராடி வருகிறார்.
இதே ஸ்டோரி லைனை வைத்து இன்னும் எத்தனை மாதங்கள் கதை செல்லும் என ஷோவின் ரசிகர்கள் சலிப்படையும் அளவுக்கு தான் கதை சென்று கொண்டிருக்கிறது.
எழிலாக நடித்து வரும் சஞ்சீவ் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என ஒரு தகவல் ஏற்கனவே வந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
தப்பிய கயல்
கயலை எரித்து கொலை செய்ய வேண்டும் என தீபிகா முயற்சி செய்கிறார். ஆனால் அந்த நேரம் பார்த்து மழை வந்து அவரை காப்பாற்றி விடுகிறது. கயல் தற்போது எழுந்து கடும் கோபத்துடன் ரவுடிகளை கட்டையால் அடித்து துவைக்கிறார். மேலும் எழில் எங்கே என தீபிகாவையும் அடித்து கேட்கிறார் அவர்.
இப்போதாவது தெரிய வருமா? ப்ரோமோவை பாருங்கள்
