திருமணம் செய்துகொண்ட அர்ஜுன் ராம்பால் – கேப்ரியல்லா டெமெட்ரியஸ்

8 ஆண்டுகள் காதலித்து லிவ்-இன் உறவில் இருந்து வந்த நடிகர் அர்ஜுன் ராம்பால் – கேப்ரியல்லா டெமெட்ரியஸ் ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.

அர்ஜுன் ராம்பால்

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அர்ஜுன் ராம்பால். இவர் கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து படங்களில் நடித்து வருகிறார். துரந்தர் திரைப்படத்தில் மேஜர் இக்பால் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார்.

8 ஆண்டுகள் காதல், லிவ்-இன் உறவு.. திருமணம் செய்துகொண்ட அர்ஜுன் ராம்பால் - கேப்ரியல்லா டெமெட்ரியஸ் | Arjun Rampal Gabriella Demetriades Wedding Goa

அர்ஜுன் ராம்பால் – கேப்ரியல்லா காதல்

நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் கேப்ரியல்லா டெமெட்ரியஸ் (Gabriella Demetriades) இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதன்பின் அர்ஜுன் ராம்பால் தனது முதல் மனைவி மெஹர் ஜெசியாவிடமிருந்து கடந்த 2019-இல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

8 ஆண்டுகள் காதல், லிவ்-இன் உறவு.. திருமணம் செய்துகொண்ட அர்ஜுன் ராம்பால் - கேப்ரியல்லா டெமெட்ரியஸ் | Arjun Rampal Gabriella Demetriades Wedding Goa

இதன்பின், திருமணம் செய்து கொள்ளாமலேயே அர்ஜுன் ராம்பால் மற்றும் கேப்ரியல்லா லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஜூலை 2019-ஆம் ஆண்டு அரிக் என்கிற முதல் ஆண் குழந்தையும் 2023-ஆம் ஆண்டு அரிவ் என்கிற இரண்டாவது ஆண் குழந்தையும் பிறந்தனர்.

நிச்சயதார்த்தம்

லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த அர்ஜுன் ராம்பால் மற்றும் கேப்ரியல்லா, கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தாங்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்டோம் என்பதை உறுதி செய்தனர்.

8 ஆண்டுகள் காதல், லிவ்-இன் உறவு.. திருமணம் செய்துகொண்ட அர்ஜுன் ராம்பால் - கேப்ரியல்லா டெமெட்ரியஸ் | Arjun Rampal Gabriella Demetriades Wedding Goa

இதுகுறித்து அவர்கள் பேசும்போது, “நாங்கள் இப்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆனால் எதிர்காலத்தில் என்னவாகும் என்று யாருக்கும் தெரியுமா?” என கேப்ரியல்லா பேச, உடனே குறுக்கிட்ட அர்ஜுன் ராம்பால், “நாங்கள் ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம்” என கூறினார்.  

திருமணம்

இந்நிலையில், 8 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் தற்போது திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமணம் குறித்து இந்த ஜோடி தங்களது சமூக வலைதள பக்கத்தில் எந்தவொரு புகைப்படத்தையும், அறிவிப்பையும் வெளியிடவில்லை.

8 ஆண்டுகள் காதல், லிவ்-இன் உறவு.. திருமணம் செய்துகொண்ட அர்ஜுன் ராம்பால் - கேப்ரியல்லா டெமெட்ரியஸ் | Arjun Rampal Gabriella Demetriades Wedding Goa

இப்படியிருக்க, வடகோவா பார்தேஸ் துணை பதிவாளர் சூரஜ் வெர்னேகர் இவர்களது திருமண செய்தியை செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களது முன்னிலையில் எளிய முறையிலேயே இந்த பதிவு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.   

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *