‘சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்’ – டாக்சிக் பட விழாவில் நடிகர் யாஷ்


நடிகர் யாஷ் டாக்சிக் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.



டாக்சிக்



இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற 26-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.


இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், அதே போல் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. பெண்களை திரைப்படத்தில் இப்படியா காட்டுவது என பலரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


ப்ரோமோஷன்


டாக்சிக் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா மற்றும் டிரைலர் வெளியிட்டு விழாவை தொடர்ந்து பல ப்ரோமோஷன் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இதில் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய நடிகர் யாஷ், “சினிமாவை ஒருபோதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாங்கள் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை. வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை கனவாக கொண்டு உழையுங்கள். மரியாதையும் வெற்றியும் உங்களைத் தேடி வரும்” என கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *