உலகளவில் 11 நாட்களில் ‘தி ஒடிசி’ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இந்த ஆண்டு ஹாலிவுட் திரையுலகில் இருந்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் ‘The Obsession’. இப்படம் உலகளவில் $458.6 மில்லியன் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
‘தி ஒடிசி’
இதனை தொடர்ந்து மாபெரும் எதிர்பார்ப்புடன் ஹாலிவுட்டில் இருந்து வெளியாகி வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம்தான் ‘தி ஒடிசி’. இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளியானது.
வசூல்
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் முதல் நாளில் இருந்து அமோக வரவேற்பை பெற்று வரும் ‘தி ஒடிசி’ திரைப்படம், இதுவரை 11 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இந்த நிலையில், 11 நாட்களில் உலகளவிலும், இந்தியாவிலும் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் உலகளவில் ரூ. 6400 கோடியும், இந்தியாவில் மட்டுமே ரூ. 150 கோடியும் வசூலித்துள்ளது.






