சீன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்


Scene movie first day box office: சூர்யா நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சீன். இப்படத்தை மலையாள திரைப்பட இயக்குநர் ஜீது மாதவன் இயக்கியுள்ளார். நஸ்ரியா, நஸ்லன் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.


சீன் திரைப்படம்


கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என தொடர் வெற்றிக்கு பின் இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மூன்றாவது திரைப்படம் சீன். மலையாள திரையுலகில் ‘ஆவேசம்’, ‘ரோமன்சம்’ போன்ற சூப்பர்ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஜீது மாதவன் சீன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் | Scene Movie First Day Box Office

இப்படத்தில் முதல்முறையாக சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நடித்திருக்கிறார். மேலும், மலையாளத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் நஸ்லன் தமிழில் களமிறங்கியுள்ளார். அதுவும் சூர்யாவுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதனை சீன் திரைப்படத்தில் சிறப்பாக செய்திருக்கிறார்.



முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்


போலீஸ் ஆஃபீசராக சூர்யா நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சனங்கள் பாசிட்டிவாக கிடைத்து வரும் நிலையில், முதல் நாள் சீன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் | Scene Movie First Day Box Office



அதன்படி, சூர்யாவின் சீன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 36+ கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் ஓப்பனிங் நாள் வசூலாகும். கண்டிப்பாக இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் | Scene Movie First Day Box Office


பொறுப்பு துறப்பு:
சீன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இதில் பதிவிடப்பட்டுள்ள தகவல், அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *