ஜனனியை மிகவும் மோசமாக திட்டிய நந்தினி, ஈஸ்வரியின் பேச்சு… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
இத்தனை நாட்கள் தர்ஷினியை காணவில்லை காணவில்லை என வீட்டினர் புலம்பி வந்தார்கள். ஒருவழியாக ஜனனி எப்படியோ அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்துவர போராடி வந்தார்.
கடைசியில் ராணா உள்ளே புகுந்து தர்ஷினியை வீட்டிற்கு அழைத்து வந்து நல்ல பெயர் வாங்கி ஜனனியை வில்லியாக்கிவிட்டார். அவர் சொன்னதை கேட்டு விசாலாட்சியை தவிர அனைவரும் ஜனனி-சக்திக்கான உறவை ரத்து செய்துவிட்டார்கள்.
வீட்டிற்கு வந்த ஜனனி-சக்தியை அனைவரும் வெளியே செல் என கூற விசாலாட்சி அவர்கள் இங்கே தான் இருப்பார்கள், நீங்கள் தனி நாங்கள் தனி என கூறி அவர்களை உள்ளே அழைத்துச் செல்கிறார்.
புரொமோ
ஜனனிக்கு எதிராக மாறிய நந்தினி-ரேணுகா மீது கடும் கோபத்தை காட்டி வருகிறார் விசாலாட்சி.
ஈஸ்வரி தான் எல்லாவற்றையும் மறந்துவிட்டாள், மகள் பாசம் கண்ணை மறைக்கிறது, இவர்களுக்கு என்ன ஆனது என கோபப்படுகிறார். ஜனனிக்காக சாப்பாடு செய்ய வந்த விசாலாட்சியிடம் நந்தினி வாய் கொடுக்க சண்டை முற்றுகிறது.
விசாலாட்சி கோபத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார், நந்தினியும் பதிலுக்கு பதில் பேசுகிறார். அப்போது ஜனனி, எனக்காக யாரும் சண்டை போட வேண்டாம் என கூற நந்தினி நீ பேசாதே. இவ்வளவு நேரம் அவர் வாய்க்கு வந்ததை பேசும்போது அமைதியாக தானே இருந்தாய், நீ வாய் மூடு என்று கோபமாக திட்டுகிறார்.
இதோ அந்த புரொமோ,






