வெளிநாட்டுக்கு போகாதீங்க, சினிமா துறையில் மாற்றம் தேவை.. கமல் வைத்த கோரிக்கை

வெளிநாட்டுக்கு போகாதீங்க, சினிமா துறையில் மாற்றம் தேவை.. கமல் வைத்த கோரிக்கை


நடிகர் கமல்ஹாசன் தற்போது சினிமா துறையினருக்கு கோரிக்கை ஒன்றை வைத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக பொருளாதார சிக்கல்களை இந்தியா சந்தித்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வு ஒரு பக்கம் இருக்க, மக்கள் அதிகம் தங்கம் வாங்குவதால் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு குறைவதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். மேலும் வெளிநாட்டு பயணங்களையும் தவிர்க்கும்படி கேட்டிருந்தார்.

வெளிநாட்டுக்கு போகாதீங்க, சினிமா துறையில் மாற்றம் தேவை.. கமல் வைத்த கோரிக்கை | Kamal Haasan Appeal To Cinema Industry

சினிமா துறையில் மாற்றம் தேவை

இந்நிலையில் நடிகர் கமல் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு சினிமா துறையில் மாற்றம் தேவை என கேட்டிருக்கிறார்.


பொருளாதார சிக்கலால் மக்கள் படம் பார்க்க செலவு செய்யும் தொகையும் குறையும், மறுபுறம் படங்கள் தயாரிக்க செலவும் அதிகரிக்கிறது. அதனால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்காத வகையில், படத்தின் பிரம்மாண்டத்திற்கு செலவு செய்யும் தொகையை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும்.

காதல் பாரிஸில் தான் வரணுமா, ஹனிமூன் ஸ்விட்சர்லாந்தில் தான் இருக்கணுமா? ரொமான்ஸுக்கு அந்நிய செலாவணி தேவையில்லை. இந்திய சினிமா மற்றும் மக்களுக்கு நம் அழகிய நாட்டின் மீதும் அவர்கள் மீதும் நம்பிக்கை தேவை.

இந்த பொருளாதார சிக்கலை எல்லோரும் இணைந்து சமாளிக்க வேண்டும். சரியான திட்டமிடல், வெளிநாட்டு ஷூட்டிங்கை தவிர்த்து, நம் நாட்டிலேயே இருக்கும் இடங்களை தேர்வு செய்யுங்கள். எரிபொருள் சேமிப்பையும் செட்டில் கவனத்தில் வைத்திருக்க வேண்டும் என கமல் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *