கண்கலங்கி விட்டேன்.. விஜய்யை சந்தித்த பின் இயக்குநர் விக்ரமன் உருக்கம்

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றியை பெற்று முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார்.
அவரை இன்று பிரபல இயக்குனர் விக்ரமன் நேரில் சென்று சந்தித்தார். அவரது மகன் விஜய் கனிஷ்காவையும் உடன் அழைத்து சென்று இருக்கிறார்.
கண்கலங்கிவிட்டேன்
முதல்வர் விஜய்யை சந்தித்துவிட்டு வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த விக்ரமன் “முதலமைச்சர் என்கிற பந்தா அவரிடம் துளி கூட இல்லை. 32 வருடங்களுக்கு முன் எப்படி பேசினாரா அதே போன்று தான் பேசினார்.”
“அது நெகிழ்ச்சியாக இருந்தது, கண்கலங்கிவிட்டேன். நான் எப்போதும் உங்கள் விஜய் தான், என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் எனவும் கூறினார்,” என விக்ரமன் தெரிவித்துள்ளார்.






