கருப்பு படத்தில் நடிக்க த்ரிஷா வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க

சூர்யாவின் கருப்பு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட தாமதத்துக்கு பிறகு இந்த படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. சூர்யா ஆர்ஜே பாலாஜி இருவரும் பல புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால் திரிஷா எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் திரிஷா புரமோஷனில் கலந்து கொள்ள மறுக்கிறார் என கூறப்படுகிறது.
அதை வெளிப்படையாகவே ட்விட்டரில் முன்பு திரிஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்
கருப்பு படத்தில் நடித்ததற்காக திரிஷா வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.
அவர் 5 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கிறாராம். ஹீரோ சூர்யாவுக்கு 45 கோடி ரூபாய் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.






