நிலா விவாகரத்து கேட்ட விஷயம் அறிந்த குடும்பத்தினர், வானதி செய்த காரியம்.. அய்யனார் துணை

நிலா விவாகரத்து கேட்ட விஷயம் அறிந்த குடும்பத்தினர், வானதி செய்த காரியம்.. அய்யனார் துணை


அய்யனார் துணை

அட கொஞ்சம் கேப் விடுங்கப்பா அடுத்தடுத்து பிரச்சனை என்றால் எப்படி தான் நாங்கள் ஆர்வமாக சீரியல் பார்ப்பது என புலம்பும் அளவிற்கு ரசிகர்கள் வருத்தப்படும் கதையாக அய்யனார் துணை சீரியல் கதைக்களம் செல்கிறது.

வீட்டுப் பிரச்சனை, பல்லவன் ரூம் போட்ட பிரச்சனை, பாண்டி-வானதி திருமண தகராறு, சேரன்-சந்தா திருமணம் நின்ற கதைக்களம், இப்போது சோழன்- நிலா விவாகரத்து பிரச்சனை என அடுத்தடுத்து ஏதாவது ஒன்று வருகிறது.

இதற்கு இடையில் நடேசன் வேறு ஒரு வண்டியை வாங்கி அந்த கடனை தனது மகன்களை அடைக்க பிரச்சனை செய்துள்ளார். 

நிலா விவாகரத்து கேட்ட விஷயம் அறிந்த குடும்பத்தினர், வானதி செய்த காரியம்.. அய்யனார் துணை | Ayyanar Thunai Serial May 11 Episode Storyline

எபிசோட்

வீட்டில் இருந்து கிளம்பும் வரை சோழனுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துவிட்டேன், விவாகரத்து கேட்க மாட்டேன் என கூறியிருந்தார் நிலா. ஆனால் நீதிமன்றம் சென்றபோது தனது திருமணத்தில் நடந்த விஷயத்தையும் சோழன் செய்த காரியத்தையும் நிலா தெரிந்து கொள்ள ஷாக் ஆகி விவாகரத்து கேட்டுவிட்டார்.

நிலா விவாகரத்து கேட்ட விஷயம் அறிந்த குடும்பத்தினர், வானதி செய்த காரியம்.. அய்யனார் துணை | Ayyanar Thunai Serial May 11 Episode Storyline

அவர் சொன்னதை கேட்டு ஷாக் ஆன சோழன் நிலாவிடம் தான் சொல்வதை ஒரு நிமிடம் கேள், எனக்கு உன்னை பிடித்தது, அதனால் தான் அப்படி செய்தேன் என கெஞ்சுகிறார்.

பின் இந்த விஷயத்தை சேரன் மற்றும் பாண்டிக்கு இந்த விஷயத்தை சோழன் கூற அவர்கள் ஷாக் ஆகிறார்கள்.

வீட்டிற்கு வந்த நிலாவிடம் என்ன ஆச்சு என கேட்க அவர் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றுவிட்டார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *