திடீரென காலில் விழுந்த பெண்.. அதிர்ச்சி ஆன முதல்வர் விஜய் என்ன செய்தார் பாருங்க

திடீரென காலில் விழுந்த பெண்.. அதிர்ச்சி ஆன முதல்வர் விஜய் என்ன செய்தார் பாருங்க

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபிறகு பல விஷயங்களை செய்து வருகிறார். இன்று சட்டப்பேரவையில் பதவிஏற்பு நிகழ்ச்சி முடிந்தபிறகு நேராக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார். அங்கு முதல்வர் விஜய்யை ஸ்டாலின் கட்டியணைத்து கையை பிடித்து உள்ளே அழைத்து சென்ற வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதனை தொடர்ந்து வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் வீட்டுக்கும் சென்று இருந்தார் விஜய். 

திடீரென காலில் விழுந்த பெண்.. அதிர்ச்சி ஆன முதல்வர் விஜய் என்ன செய்தார் பாருங்க | A Woman Falls At Cm Actor Vijay Feet Video Viral

காலில் விழுந்த பெண்

வைகோ வீட்டுக்கு முதல்வர் விஜய் சென்றபோது, அவரது வீட்டில் பணியாற்றும் பெண்களை வரச்சொல்லி விஜய்யிடம் பேசவைத்திருக்கின்றனர். இவங்க எல்லாம் விசிலுக்கு ஓட்டு போட்டவங்க என அந்த பெண்களை பற்றி கூறினர்.

அவர்கள் விஜய்யை அருகில் பார்த்த பூரிப்பில் இருந்தனர். ஒரு பெண் திருஷ்டி கழிக்க, விஜய்யும் அதை திருப்பி செய்தார். அதன்பின் ஒரு பெண் திடீரென விஜய்யின் காலில் விழுந்துவிட்டார்.

அதை சற்றும் எதிர்பார்க்காத விஜய் அந்த பெண்ணை எழ சொன்னார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *