ராணாவால் ஜனனியை அழிக்க களமிறங்கிய முன்னாள் வில்லன், யார் தெரியுமா?… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
வில்லனுக்கு தண்டனை கிடைக்குமா இல்லையா, நாயகி ஜெயிப்பாரா இல்லையா என்ற கேள்வியுடனே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் உள்ளனர்.
குணசேகரன் பத்தாது என்று இப்போது ராணா என்ற வில்லன் வந்துள்ளார், அவர் இவரை விட கொடூரமானவராக உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக குணசேகரன் வீட்டிற்குள் வந்த ராணா இப்போது மொத்த குடும்பத்தையும் தன் கைக்குள் வைத்துவிட்டார்.
சக்தி மற்றும் ஜனனியை குணசேகரன் வீட்டினர் உறவில் இருந்து ரத்து செய்துவிட்டார். ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா என கையெழுத்து போட விசாலாட்சி மட்டும் கையெழுத்து போடாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ராணா ஈஸ்வரி கையை பிடித்துக்கொண்டு சின்ன வயதிலேயே என் அம்மாவை இழந்தவன் நான், உங்களை தான் நான் அம்மாவாக பார்க்கிறேன் என கூற அவர் அப்படியே எமோஷ்னல் ஆகிறார்.
பின் ஜனனியை அழிக்க ராணா மூலம் பழைய வில்லன் களமிறங்குகிறார்.
அவர் எனக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்தது, அதை போட்டுக்கொடுத்து என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்ப வைத்துவிட்டாள் என கூற ராணா அப்போது ஜனனியை போட்டுத் தள்ளிவிடு என்கிறார்.






