கருப்பு திரைப்படத்தின் முன்பதிவு.. வசூல் வேட்டையை தொடங்கிய சூர்யா

கருப்பு திரைப்படத்தின் முன்பதிவு.. வசூல் வேட்டையை தொடங்கிய சூர்யா


கருப்பு

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் கருப்பு. இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ளார்.

கருப்பு திரைப்படத்தின் முன்பதிவு.. வசூல் வேட்டையை தொடங்கிய சூர்யா | Karuppu Movie Pre Booking Box Office



மேலும் இயக்குநராக மட்டுமின்றி வில்லனாகவும் இப்படத்தில் களமிறங்கியுள்ளார் பாலாஜி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த ஆண்டே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போக, மே 14ஆம் தேதி ரிலீஸ் என முடிவு செய்யப்பட்டது.

முன்பதிவு வசூல்



நேற்று கருப்பு திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து Youtube-ல் அமோக வரவேற்பை பெற்றது. வெறித்தனமா இருக்கே, சூர்யாவின் கம்பேக், OG இஸ் பேக் என ரசிகர்கள் இந்த டிரைலர் கொண்டாடி வருகின்றனர்.

கருப்பு திரைப்படத்தின் முன்பதிவு.. வசூல் வேட்டையை தொடங்கிய சூர்யா | Karuppu Movie Pre Booking Box Office

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் ரூ. 1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பே கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனையை முன்பதிவில் கருப்பு திரைப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *