மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதியா இது?… லேட்டஸ்ட் போட்டோ குவியும் லைக்ஸ்

மூன்று முடிச்சு
சீரியல்களின் கிங்கான சன் டிவி டிஆர்பியில் ஏற்கெனவே உச்சத்தில் தான் உள்ளது.
ஆனாலும் அந்த இடத்தை விட்டுவிட கூடாது, நம்பர் 1ல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என நிறைய விஷயங்கள் செய்கின்றன.
அப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் ஒன்று தான் மூன்று முடிச்சு.
கடந்த ஆகஸ்ட் 2024ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 423 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.
இதில் சூர்யா-நந்தினி ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.
சூர்யாவாக நியாஸ் நடிக்க நந்தினியாக ஸ்வாதி நடிக்கிறார்.
இப்போது கதையில் நந்தினி தேர்வு எழுதியது, சுரேஷ் தோழி கொலை, அருணாச்சலம் சிக்கியுள்ள வழக்கு என ஒரே பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது.
போட்டோ
இந்த தொடரின் மூலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்வாதி. இவர் இந்த சீரியலுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக புகைப்படம் எதுவும் இன்ஸ்டாவில் வெளியிடாமல் இருந்த நடிகை ஸ்வாதி தற்போது ஒரு அழகிய போட்டோ அதுவும் மிகவும் Brightஆன போட்டோ வெளியிட்டுள்ளார்.
மிகவும் Brightஆன மஞ்சள் நிற புடவை புகைப்படத்தை பதிவிட்டு எனது எதிர்காலத்தை விட இந்த புடவை நிறம் மிகவும் Brightஆக உள்ளது என பதிவிட்டுள்ளார். அதோடு ரசிகர்கள் அழகி என பதிவிட்டு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.






