திங்கள் முதல் சன் டிவியில் புது சீரியல் .. பைரவி ப்ரோமோ இதோ
சன் டிவியில் இந்த வாரத்தோடு கயல் சீரியல் முடிவுக்கு வருகிறது. அதனால் அடுத்த திங்கட்கிழமை முதல் பைரவி என்ற புது சீரியலை ஒளிபரப்ப இருக்கின்றனர்.
அந்த சீரியல் எப்படி இருக்க போகிறது என தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ப்ரோமோ
இந்நிலையில் தற்போது பைரவி சீரியலின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஹீரோயின் பைரவி கோவிலில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து கண்கலங்கி போகிறார். அதை பார்த்த ஹீரோவின் அம்மா எதற்காக அழுகிறாய் என கேட்க, ‘எனக்கும் இது போல ஒரு குடும்பம் வேண்டும்’ என சொல்கிறார். அதை கேட்ட உடனே அவரை தனது வீட்டுக்கு அழைத்து செல்கிறார் ஹீரோவின் அம்மா.
அந்தப் பெண்ணை விட்டு விடும்படி வில்லி வந்து தடுக்கிறார். ஆனால் அதை கேட்காமல் அவர் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். ஒரே வீட்டில் ஹீரோ, ஹீரோயின்.. கதை எப்படி இருக்கும்? ப்ரோமோவை பாருங்க.
புது நம்பிக்கையுடன் வருகிறாள் பைரவி❤️
பைரவி | வரும் திங்கள் முதல் | 7:30 PM#SunTV #Bairavi #BairaviPromo #NewSerial #SunPromos pic.twitter.com/x7iKjV7Nvb
— Sun TV (@SunTV) October 19, 2026
