மொத்த ரகசியமும் உடைந்தது.. திருமணம் நடக்காதா? கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ

சன் டிவியின் கயல் சீரியல் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனந்தியின் திருமணம் எல்லோரும் நினைப்பது போல மீனாட்சியின் மகன் உடன் நடக்குமா என்பது தற்போது பெரிய கேள்விக் குறியாகி இருக்கிறது.
மகள் ஹாஸ்பிடலில் இருப்பதால் வேதவள்ளி நேராக வந்து கயல் குடும்பத்தை திட்டி தீர்க்கிறார். மகள் மீது பாசம் இருப்பது போல நடிக்கும் அவர் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.
அதிர்ச்சி ஆகும் மீனாட்சி
அப்போது அங்கு வரும் மீனாட்சியிடமும் வேதவள்ளி கயல் குடும்பம் பற்றி மோசமாக பேசுகிறார். ஆனந்தி கொலைகாரி என அவர் சொல்கிறார். அனைத்தையும் கேட்ட மீனாட்சி அதிர்ச்சி ஆகி, தான் தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என பேசுகிறார்.
அதனால் ஆனந்தி குடும்பம் அதிர்ச்சி ஆகி நிற்கிறது. இனி திருமணம் நடக்குமா? ப்ரோமோவை பாருங்க.






