மக்களிடம் ரூ.10 கோடி வசூல் செய்து மோசடி.. பிரபல பாடகியை வலைவீசி தேடும் போலிஸ்

பிரபல பாடகி ஒருவர் ரூபாய் 10 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல தெலுங்கு பாடகி மங்லி (Mangli) தான் இந்த சர்ச்சையில் சிக்கி இருப்பவர். அதிக வட்டி மற்றும் ரிட்டர்ன்ஸ் தருவதாக கூறி 100 பேரிடம் அவர் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருக்கிறார்.
ஆனால் வட்டியும் கொடுக்கவில்லை, போட்ட பணத்தையும் கொடுக்கவில்லையாம். அதனால் ஏமாந்த நபர்கள் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர்.
மிரட்டல்
பாடகியிடம் ஏமாந்தவர்கள் சார்பாக வக்கீல் சுப்பாராவ் என்பவர் குற்றவாளிகளிடம் இது பற்றி பேசி இருக்கிறார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தர முடியாது என சொல்லி வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. BNS பிரிவு 351(2) மற்றும் 352 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறதாம். மேலும் விசாரணை தீவிரமாக நடைப்பெற்று வருகிறதாம்.






