விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை
சோழன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என்று தெரிந்தவுடன், விவாகரத்து வேண்டாம் என்கிற முடிவில் இருந்து விவாகரத்து வேண்டும் என நிலா கூறிவிட்டார். இதனால் சோழன் மட்டுமின்றி மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டனர்.
இதன்பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழன் செய்த பித்தலாட்டத்தை கூறினார். இதனால் இனி இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். நிலா சென்ற சில நிமிடங்களிலேயே சோழனும் இனி இந்த வீட்டில் நான் இல்லை என கூறிவிட்டு வெளியேறினார்.
விபத்தில் சிக்கிய சோழன்
வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலா தனது தோழியுடன் ஹாஸ்டலுக்கு சென்றுவிட்டார். அங்கு தனது தோழியிடம் கதறி அழுது தனது வேதனைகளை கூறுகிறார்.
இந்த நிலையில், பல்லவன் நிலாவுக்கு கால் செய்கிறார். சோழனுக்கு ஆக்சிடென்ட் (Accident) ஆகிவிட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல்லவன் கூறவும் நிலா அதிர்ச்சியடைகிறார். உடனடியாக சோழனை பார்க்க ஹாஸ்டலில் இருந்து மருத்துவமனைக்கு செல்கிறார். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சோழனின் நிலை என்ன, இனி அடுத்து என்ன நடக்க போகிறது என்பது நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.






