10 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

நூறு சாமி
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் நூறு சாமி.
இப்படத்தை இயக்குநர் சசி இயக்கியிருந்தார்.
இவர் இதற்கு முன் விஜய் ஆண்டனியை வைத்து பிச்சைக்காரன் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நூறு சாமி படத்தில் கதையின் நாயகியாக ஸ்வாசிகா நடிக்க, அவருடன் இணைந்து அஜய், சக்தி, காவ்யா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
வசூல்
இந்த நிலையில், 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் நூறு சாமி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 15 கோடி வசூலித்துள்ளது.






