நான் சபிச்சது உண்மைதான், ஆனால்… நாஞ்சில் விஜயன் பிரச்சனை குறித்து வைஷு பதிலடி


நாஞ்சில் விஜயன்

நாஞ்சில் விஜயம், தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வரக்கூடியவர்.

விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இவர் அதிகம் பெண் வேடம் போட்டு நடித்து மக்களை சிரிக்க வைப்பார். பல மேடை பேச்சுகள், சொந்த தொழில் என பிஸியாக இருந்தவருக்கு வாழ்க்கையில் ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது.

அதாவது நாஞ்சில் விஜயன் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.

மேலும் திருநங்கை சகோதரி வைஷ்ணவியிடம் நான் தோற்றுவிட்டேன், இருவரையும் தொடர்புப்படுத்தி பேசிய போதெல்லாம் என் மனைவி உறுதியாக இருந்தார், ஆனால் சிறிய சண்டையால் மனைவியை பிரிந்துவிட்டேன் என பதிவு செய்திருந்தார்.

திருநங்கை பதிலடி

நாஞ்சில் விஜயனின் பதிவிற்கு தற்போத வைஷு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், என்னுடைய சாபத்தால் மனைவியை பிரிந்துவிட்டேன் என்கிறார்.

கடவுள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் நியாயம் கிடைக்க தான் போராடினேன், கணவன்-மனைவி பிரிய வேண்டும் என ஒருபோதும் சபிக்கவில்லை.

நான் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றதும் சரி, உங்களிடம் கேட்டதும் சரி எல்லாமே என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் செய்தார். நீங்க ரெண்டு பேரும் பிரிந்து போக வேண்டும் என நான் சத்தியமாக எதையும் செய்யவில்லை என வீடியோ பதிவு செய்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *