டூரிஸ்ட் பேமிலியின் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

டூரிஸ்ட் பேமிலியின் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


டூரிஸ்ட் பேமிலி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

குட் நைட், லவ்வர் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி ஹாட்ரிக் வெற்றியை அவர்களுக்கு தேடி தந்துள்ளது. இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ், பகவதி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

மனிதநேயம் பற்றி பேசிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில், டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 21 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் 21 நாட்களில் உலகளவில் ரூ. 79 கோடி வசூல் செய்துள்ளது. திரையரங்கில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காரணத்தினால், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் இன்னும் ஒரு வாரத்திற்கு தள்ளிப்போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *