சோகத்தில் இருக்கும் சேரன், திருமண வரவேற்பிற்கு வர மறுக்கும் நடேசன்… அய்யனார் துணை சீரியல்

சோகத்தில் இருக்கும் சேரன், திருமண வரவேற்பிற்கு வர மறுக்கும் நடேசன்… அய்யனார் துணை சீரியல்


அய்யனார் துணை 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களை தாண்டி அய்யனார் துணைக்கு தனி ரசிகர்கள் வட்டாரம் உருவாகிவிட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நிலா-சோழன் திருமண எபிசோட் வந்தது.

அது முடிந்ததும் அடுத்து கதைக்களமாக இப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கப்போகிறது. திருமண நிகழ்ச்சிக்காக புடவை எடுக்க நிலா அப்பா அனைவரையும் ஒரு பிரபல கடைக்கு அழைத்து செல்கிறார்.

அங்கு சேரன், பாண்டி, பல்லவன் 3 பேரும் ஆடைகளின் விலை பார்த்து ஷாக் ஆக அந்த நேரத்தில் நிலா அப்பா-அண்ணன் இருவரும் அசிங்கப்படுத்துவது போல் பேசுகிறார்கள். இதனால் 3 பேரும் எப்போதும் போ சாதாரணமாக போடும் Shirt எடுக்கிறார்கள்.

சோகத்தில் இருக்கும் சேரன், திருமண வரவேற்பிற்கு வர மறுக்கும் நடேசன்... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial June 19 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், டிரஸ் எடுத்த பிறகு சாப்பிட செல்கிறார்கள். அங்கு நிலா அப்பா வெளிநாட்டு உணவுகள் இங்கே பேமஸ் என அதற்கு ஏற்றார் போல் உணவு ஆர்டர் செய்கிறார்கள். ஆனால் நிலா சோழன் பிரியாணி, சிக்கன் பிரைட் ரைஸ் போன்று ஆர்டர் செய்ய அவரது அப்பா கேவலமாக பார்க்கிறார்.

சாப்பாடு முடித்ததும் சேரன் தனது அத்தை வீட்டிற்கு வருகிறார். சோழன் திருமண விஷயங்களை கூறி அவர்களை அழைக்கிறார். அவரது அத்தையும், கார்த்திகாவும் கண்டிப்பாக வருகிறோம் என்கிறார்கள்.

சோகத்தில் இருக்கும் சேரன், திருமண வரவேற்பிற்கு வர மறுக்கும் நடேசன்... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial June 19 Episode

ஆனால் அவர்கள் இருவரும் பார்ப்பதற்கு மிகவும் சோகமாக காணப்படுவதால் சேரன் என்ன விஷயம் என கேட்க கார்த்திகா ஒன்றும் இல்லை என சமாளிக்கிறார். ஆனால் சேரனுக்கு ஏதோ பிரச்சனை என்பது மட்டும் புரிகிறது. அவர்களை நினைத்து கவலைப்படுகிறார்.

பின் சோழன்-பாண்டி, வானதி வீட்டிற்கு சென்று அவர்களை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள்.

சோகத்தில் இருக்கும் சேரன், திருமண வரவேற்பிற்கு வர மறுக்கும் நடேசன்... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial June 19 Episode

நிகழ்ச்சி இப்படி சில காட்சிகளுடன் முடிவடைய காரில் நிகழ்ச்சிக்கு அனைவரும் செல்கிறார்கள். அப்போது சோழன் தனது அப்பாவை தண்ணி அடித்துவிட்டு கலாட்டா செய்யாமல் இருக்க வேண்டும் என கூற, நடேசன் ஆள் ஆளுக்கு என்ன என்னை கூறுகிறீர்கள், வண்டியை நிறுத்து நான் வரவில்லை என கோபமாக கூறுகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *