சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
சூர்யா மற்றும் ஜீது மாதவன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தில் டாப் நடிகர்கள் சிலர் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘சீன்’
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜீது மாதவன். ரோமச்சன், ஆவேசம் ஆகிய திரைப்படங்களை இவர் இதற்கு முன் இயக்கியுள்ளார். தொடர்ந்து இரு வெற்றி படங்களை கொடுத்த ஜீது மாதவன் தனது மூன்றாவது திரைப்படத்திற்காக சூர்யாவுடன் கைகோர்த்தார்.
இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லன், ராஜப்ரியன், லால் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. மேலும், தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது என்றும் அறிவித்துவிட்டனர்.
கேமியோஸ்
இந்த நிலையில், ‘சீன்’ திரைப்படத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த டாப் 5 ஹீரோக்களில் இருவர் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரும் ‘சீன்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இவர்கள் மூவருடைய கேமியோ கண்டிப்பாக திரையரங்கை தெறிக்கவிட போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
