சரத்குமார், ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் கொலை.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்


radhika house worker son murdered: பண்ருட்டி அருகே உள்ள நடிகை ராதிகாவின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகனை கொலை செய்து கடற்கரையில் நண்பர்கள் புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்


எழில்செல்வி என்பவர் நடிகை ராதிகா சரத்குமார் வீட்டில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 19). இவர் டைல்ஸ் போடும் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி புறப்பட்டு ஸ்ஹ்ண்ணையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை ரமேஷ் பல இடங்களில் தனது மகனை தேடி பார்த்துள்ளார்; ஆனால், கிடைக்கவில்லை.

இதனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சரத்குமார், ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் கொலை.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Radhika Sarathkumar House Worker Son Murdered

அதிர்ச்சி தகவல்

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை தேடி வந்தனர். இந்த விசாரணையில் சிறுவத்துறை சார்ந்த தேவராசு (வயது 18), தினேஷ் (வயது 23) ஆகிய இருவரையும் பிடித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில், இவர்கள் மூவரும் நண்பர்கள் மற்றும் இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேவராசு மற்றும் தினேஷ் பொன்னேரி கடற்கரை பகுதிக்கு பிரசாந்தை வரவழைத்து அவரை அடித்து கொலை புதைத்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *