புலவர் திரை விமர்சனம்


தமிழ் சினிமாவை புரட்டிபோட்டு புரட்சி செய்த மாபெரும் இயக்குனர் பாரதிராஜா மறைவிற்கு பிறகு அவர் நடிப்பில் ரவி முருகையா இயக்கத்தில் வெளிவந்துள்ள புலவர் எப்படியுள்ளது? பார்ப்போம்.

புலவர் திரை விமர்சனம் | Pulavar Movie Review

கதைக்களம்



4 பேர் ஒரு கொலை வழக்கில் சிக்குகின்றனர், சந்தேகத்தில் பெயரில் இவர்களை கைது செய்த போலிஸார் என்ன முயற்சி செய்தாலும் அவர்களிடமிருந்து எந்த உண்மையையும் வெளியே கொண்டு வர முடியவில்லை.

புலவர் திரை விமர்சனம் | Pulavar Movie Review

அதனால் எப்படியாவது உண்மையை கொண்டு வர, ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரி பாரதிராஜா அவர்களிடம் கொண்டு வருகிறார்கள், அவர் இந்த மாதிரி உண்மையை கொண்டு வருவதில் வல்லவர்.

புலவர் திரை விமர்சனம் | Pulavar Movie Review




அப்படியிருக்க பாரதிராஜா இவர்களிடமிருந்து தனக்கே உரிய ஸ்டைலில் இன்வெஸ்டிகேஷன் செய்து, யார் உண்மையான கொலை செய்தவர் யார் என்பதை வெளியே கொண்டு வருவதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்



பாரதிராஜா கலைஞனுக்கு இறப்பே இல்லை, கலை இருக்கும் வரை உயிர் இருக்கும் என்பது போல் இறந்தும் சினிமா என்ற கலை மூலம் நம்மிடம் இன்றும் வாழ்ந்து வருகிறார், ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாக வரும் பாரதிராஜா அத்தனை நிதானமான தனக்கே உரிய அனுபவத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

இந்த படமே ஒரு ஸ்லோ ட்ராமா இன்வெஸ்டிகேஷன் படம் தான், மலையாளத்தில் இது போல் பல படங்கள் வந்திருந்தாலும், நம்ம ஊரில் இப்படி ஒரு படம் இந்த களத்திற்கே இயக்குனரை பாராட்டலாம்.

புலவர் திரை விமர்சனம் | Pulavar Movie Review

அதிலும் பாரதிராஜா இன்வெஸ்டிகேஷன் செய்யும் விதமே செம சுவாரஸ்யமாக இருக்கும், குற்றம் சாட்டபட்டவர்களுக்கு அவர் கொடுக்கும் சாப்பாடு, அதை விட அவர் பேசும் கதைகள் என இன்வெஸ்டிகேஷன் அதோடு ஆங்காங்கே சில நகைச்சுவை காட்சிகளும் வருகிறது.

ஆனால், முதல் பாதி இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியிலும் அந்த டென்ஷன் நம்மிடம் இருந்தாலும் உண்மையாகவே இவர்கள் குற்றவாளியை நோக்கி தான் போகிறார்களா என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை.

புலவர் திரை விமர்சனம் | Pulavar Movie Review

பாரதிராஜா தாண்டி ரேச்சல் வழக்கம் போல் தன் யதார்த்த நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்ழ் அதிலும் அந்த பெஞ்சில் உட்காரும் இடம் சூப்பர்.

டெக்னிக்கலாக படத்தின் பட்ஜெட் குறைபாடு நன்றாகவே தெரிகிறது, ஆனாலும் இந்த சிறிய பட்ஜெட்டில் முடிந்தளவிற்கு சிறப்பாகவே கொடுத்துள்ளனர்.

க்ளாப்ஸ்




  • கதைக்களம்



  • வசனங்கள்


  • முதல் பாதி



பல்ப்ஸ்



  • படம் மிக பொறுமையாகவே செல்லும், திரைக்கதையில் ஒருவித டென்ஷன் இருந்தாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் களத்திலிருந்து விலகியது போல் இருந்தது.



மொத்தத்தில் இந்த புலவர் கொஞ்சம் பொறுமை இருந்தால் கண்டிப்பாக ஒரு நல்ல அனுபவம் மற்றும் அறிவுரையும் தருவார்.

புலவர் திரை விமர்சனம் | Pulavar Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *