சந்தாவிற்கு திருமணம்.. வேதனையில் சேரன்.. அய்யனார் துணை சீரியல் பரபரப்பான ப்ரோமோ

சந்தாவிற்கு திருமணம்.. வேதனையில் சேரன்.. அய்யனார் துணை சீரியல் பரபரப்பான ப்ரோமோ


விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருக்கும் ‘அய்யனார் துணை’யில் வரும் வாரம் நடக்கப்போகும் விறுவிறுப்பான கதைக்களம் குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சந்தா – சேரன் 


சந்தா – சேரன் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நேரத்தில், சந்தாவின் மாமா துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றார். இதன்பின், சந்தாவை தேடி சேரன், சோழன் மற்றும் நிலா அவருடைய ஊருக்கு சென்றனர். அப்போது அவர் சில நிபந்தனைகளை விதித்தார். அதையெல்லாம் செய்தால் சந்தாவை திருமணம் செய்து தருவதாகவும் கூறினார்.

சந்தாவிற்கு திருமணம்.. வேதனையில் சேரன்.. அய்யனார் துணை சீரியல் பரபரப்பான ப்ரோமோ | Ayyanar Thunai Serial Upcoming Episodes Promo

ஆனால், சந்தாவை சேரன் ரகசியமாக சந்திக்க வந்திருந்தபோது, சந்தாவிற்கும் அவளுடைய மாமாவிற்கும் தான் திருமணம் என அவருடைய தந்தை கூறினார். இது சேரனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது.

கட்டாய திருமணம்


இந்த நிலையில், தனது மாமாவுடன் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள் என சேரனுக்கு கால் செய்து கூறுகிறார் சந்தா. இதை சேரன் குடும்பத்திடம் கூற, சந்தாவை அங்கிருந்து எப்படியாவது தூக்கி, உனக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என சோழன் கூறுகிறார்.

சந்தாவிற்கு திருமணம்.. வேதனையில் சேரன்.. அய்யனார் துணை சீரியல் பரபரப்பான ப்ரோமோ | Ayyanar Thunai Serial Upcoming Episodes Promo

இதையடுத்து குடும்பத்துடன் அனைவரும் சந்தா ஊருக்கு செல்கிறார்கள். சந்தா கழுத்தில் தாலி ஏறப்போகும் நேரத்தில் திருமண மண்டபத்திற்கு அனைவரும் வருகிறார்கள், இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *